ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16-ந்தேதி நடக்கிறது
ராணிப்பேட்டை
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதனடிப்படையில் இம்மாதத்தில் வருகிற 16-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பி.இ. படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story