ஓவியப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு


ஓவியப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு
x

ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினவிழாவையொட்டி ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினவிழாவையொட்டி ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஓவியப்போட்டி

ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினவிழாவையொட்டி ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு 3 தலைப்புகளில் இந்த ஓவியப்போட்டி நடைபெற்றது. இதன்படி 6 முதல் 8 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடல்வாழ் உயிரினங்கள் என்ற தலைப்பிலும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு வனஉயிரினங்கள் என்ற தலைப்பிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தமிழக சுதந்திர போராட்ட வீரர் என்ற தலைப்பிலும் ஓவிய போட்டி நடைபெற்றது.

இதில் 6 முதல் 8 வகுப்பு வரையிலானவர்களுக்கு நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி பிரதிஷா முதல் இடமும், ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி மாணவி ரிமிதரிஷா 2-ம் இடமும், ஸ்ரீசேதுபதி நடுநிலைப்பள்ளி மாணவர் காளீஸ்வரன் 3-ம் இடமும் பெற்றனர்.

சிறப்பு பரிசு

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிஸ்மா முதலிடமும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா 2-ம் இடமும், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவன் திருமுருகன் 3-ம் இடமும், ராமநாதபுரம் அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி விஷாலி சிறப்பு பரிசும் பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கான போட்டியில் ராமநாதபுரம் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாஸ்கரன் முதலிடமும், ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தோஷ் 2-ம் இடமும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெகதீசன் 3-ம் இடமும் பெற்றனர்.

பாராட்டு

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் வரவேற்று பேசினார். ஓவியர் வேல்முருகன் வாழ்த்தி பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அருங் காட்சியக இளநிலை உதவியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.


Next Story