மனிதநேய வார விழாவையொட்டிபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்


மனிதநேய வார விழாவையொட்டிபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:45 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தீண்டாமை ஒழிப்பு மனிதநேய வார விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

பின்னர் கலெக்டர் ஸ்ரேயா சிங் பேசியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழாவை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பொதுமக்களுக்கு மனிதநேயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மனிதநேயத்தை அனைவரும் சரியாக கடைப்பிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழிக்கப்படும். அதை உணர்ந்து பள்ளி மாணவர்கள் தீண்டாமையை அகற்றி எல்லோரும் நல்லிணக்கத்துடன் வாழ பொதுமக்களிடையே முழுமையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சுகந்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story