எரிபொருள் சேமிப்பில் சிறப்பாக செயல்பட்டஅரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், பணியாளர்களுக்கு பரிசுமேலாண்மை இயக்குனர் வழங்கினார்


எரிபொருள் சேமிப்பில் சிறப்பாக செயல்பட்டஅரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், பணியாளர்களுக்கு பரிசுமேலாண்மை இயக்குனர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 May 2023 12:30 AM IST (Updated: 10 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரசு போக்குவரத்து கழகத்தில் எரிபொருள் சேமிப்பில் சிறந்த முறையில் பணியாற்றிய தொழில்நுட்ப டிரைவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் பொன்மொழி தலைமை தாங்கி எரிபொருள் சேமிப்பில் சிறப்பான முறையில் பணிபுரிந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம், தொழில்நுட்ப பொது மேலாளர் ரவி லட்சுமணன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை மேலாளர் மகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story