போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை


போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை
x

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

பெரம்பலூர்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதிக்கப்படுவார்கள். ஆதார் அட்டை நகல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால், அனைவரும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை போட்டிகள் நடைபெறும் நாளன்று கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இதில் பள்ளி, கல்லூரிகளில் பயில்பவர்கள், அவர்கள் படிப்பதற்கான சான்றினை அவரவர் தலைமையாசிரியர், முதல்வர் கையொப்பத்துடன் பெற்று வர வேண்டும். மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும்.


Next Story