ஒலிம்பியாட் திறனறிவு தேர்வில் வெற்றிபெற்ற 50 மாணவர்களுக்கு பரிசு


ஒலிம்பியாட் திறனறிவு தேர்வில் வெற்றிபெற்ற 50 மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சியில் ஒலிம்பியாட் திறனறிவு தேர்வில் வெற்றிபெற்ற 50 மாணவர்களுக்கு பரிசு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாடமி மெட்ரிக் மற்றும் ஏ.கே.டி.வித்யா சாகேத் சி.பி.எஸ்.இ. ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தவும், கல்வி கற்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஒலிம்பியாட் திறனறித் தேர்வு கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அரசு, தனியார் மற்றும் சிபி.எஸ்.இ. பள்ளிகளில் 5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 2,210 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் வகுப்பு வாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி, 2 முதல் மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு டேப், 4-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பரிசளிப்பு விழா ஏ.கே.டி.பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமி பிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். மெட்ரிக் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் மாணவர்களுக்கு ஒலிம்பியாட் திறனறிவு தேர்வின் அவசியம் குறித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக நீலமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு தேர்வில் முதலிடம் பிடித்த 5 பேருக்கு மடிக்கணினி, 10 பேருக்கு டேப், 35 பேருக்கு ஸ்மார்ட் வாட்ச் என 50 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.


Next Story