கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x

கொடைக்கானல் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்தில் கைப்பந்துபோட்டியில் வெற்றி அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் தாலுகா மன்னவனூரில், வனத்துறையின் சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பரிசல் சவாரி, ஜிப் லைன் எனப்படும் கயிறு மூலம் பயணம் செய்தல், குதிரை சவாரி, சிறுவர்களுக்கான பூங்கா உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த மையத்தில் மாவட்ட வனஅலுவலர் திலீப் உத்தரவுப்படி, சுற்றுலாப்பயணிகளை கவருவதற்காக அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் குறிப்பாக கிராம பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கைப்பந்து போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் கூக்கால் கைப்பந்து அணி முதல் இடத்தையும், வனக்காவலர்கள் குழு அணி 2-ம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு வனச்சரக அலுவலர் நாதன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வனத்துறை ஊழியர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story