வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
கொள்ளிடம் அருகே நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதாமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி கலைவாணன் வரவேற்றார். மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ராஜேஷ், துணை அமைப்பாளர்கள் நிகேஷ், ஜெயச்சந்திரன், சந்திரகுமார், சிற்றரசன், சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் விஜய் அறிவழகன், பேராசிரியர் வன்மீக வெங்கடாசலம், தலைமை கழக பேச்சாளர் அருள்தாஸ் ஆகியோர் பேச்சுப்போட்டி நடுவர்களாக செயல்பட்டனர். மாநில பொறியாளர் அணி தலைவர் துரை சரவணன், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேச்சுப் போட்டிகளில் தொகுதி வாரியாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.3 ஆயிரமும், போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கி பேசினர். ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர்கள் மலர்விழி திருமாவளவன், பஞ்சுகுமார், கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.