விதை வாங்கும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்


விதை வாங்கும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
x

விதை வாங்கும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார்

திருநெல்வேலி

விதை வாங்கும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பிசான பருவ நெல் சாகுபடி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணை பாசன பகுதி விவசாயிகள் தற்போது பிசான பருவ நெல் சாகுபடி செய்திட தயாராகி வருகின்றனர். நெல் விதை வாங்கும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை தவறாது பி்ன்பற்ற விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்திய நெல் விதைகளை விதை உாிமம் பெற்ற விற்பனையாளரிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். சான்று அட்டையில் தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையினரால் தர உத்தரவாத விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சான்றளிக்கப்பட்ட விதைகள்

ஆதார நிலை விதைகளின் சான்று அட்டை வெண்மை நிறத்திலும், சான்று நிலை விதைகளின் சான்று அட்டை நீல நிறத்திலும் இருக்கும். சான்று அட்ைட மற்றும் விவர அட்டை பொருத்திய சான்றளிக்கப்பட்ட விதைகளை வாங்குவது சிறந்்தது.

விவசாயிகள் விதை வாங்கும்போது சான்று அட்டையில் குறிப்பிட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். வாங்கும் விதைகளுக்கு விற்பனையாளரிடம் இருந்து பயிர், ரகம், குவியல் எண் ஆகிய விவரம் குறிப்பிட்ட விற்பனை பட்டியலை தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களின் நெல் விதைகளை வாங்கும் விவசாயிகள், விதை பைகளில் உள்ள உண்மை நிலை விவர அட்டையில் குறிப்பிட்ட விவரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

நிலக்கடலை விவசாயம்

மேலும் நெல்லை, தென்காசி மற்றும் குமாி மாவட்டங்களில் கார்த்திகை பருவத்தில் நிலக்கடலை விவசாயத்தை மேற்கொள்ள விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். விவசாயிகளின் விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியான விலையில் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் ரகங்கள் விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே ரசீது பெற்று வாங்கி பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புகார் தெரிவிக்கலாம்

விவசாயிகள் தாங்கள் வாங்கி விதைத்த விதைகள் தரமற்றதாகவோ, முளைப்புத்திறனில் குறைபாடு தொடர்பான புகார் ஏதேனும் பெறப்பட்டால் விதை ஆய்வு துணை இயக்குனர் 0462- 2553017, விதை ஆய்வாளர்- நெல்லை (97504 27427), விதை ஆய்வாளர்- வள்ளியூர் (96293 61660), விதை ஆய்வாளர்- தென்காசி (93844 47338), விதை ஆய்வாளர் - சங்கரன்கோவில் (99650 50077), விதை ஆய்வாளர்- நாகர்கோவில் (87541 92941) ஆகியோரின் தெலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story