வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்

கோவை பகுதியில் வசிக்கும் பக்தர்கள் பலர் காளி உள்பட சாமி வேடம் அணிந்து குலசேகரபட்டினத் துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.
வடவள்ளி
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோவை பகுதியில் வசிக்கும் பக்தர்கள் பலர் காளி உள்பட சாமி வேடம் அணிந்து குலசேகரபட்டினத் துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.
இதை கோவை செட்டிவீதி யில் இருந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் தசரா திருவிழாவில் நேர்த்தி கடன் செலுத்து வார்கள்.
எனவே முத்தாரம்மன் கோவிலில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயதசமி நாளில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் காந்தி மற்றும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேரணி நடைபெற இருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து அவதூறு பரப்புகிறார ்கள்
எனவ. தேசவிரோத செயல் கள் தடுக்கப்பட வேண்டும். மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு, கூடங்குளம் போராட்ட குழுவினருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது.
அவர்களும் தமிழக அரசின் வளர்ச்சிக்கு எதிராக சதி செய்கிறார்கள். எனவே அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.