பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி


பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரியூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகாவுக்குட்பட்ட, ஈரியூர் கிராமத்தில் வருவாய்த் துறை சார்பில் அடுத்த மாதம்(அக்டோபர்) கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கிராம மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கும் நிகழ்ச்சி ஈரியூர் கிராம சேவை மையத்தில் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு ஆகியோர் முன்னிலை வகித்து பொதுமக்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றனர். சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன் வரவேற்றார்.

இதில் நைனார்பாளையம் வருவாய் ஆய்வாளர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலைமுருகன், துணை தலைவர் கொளஞ்சி பொன்னுசாமி, மகாலிங்கம், ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய் ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து முகாம் நடைபெறும் நாள் வரை பொது மக்கள் கோரிக்கை மனுக்களை கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story