ரூ 2 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு


ரூ 2 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
x

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

வேலூர்

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனரும், திட்ட இயக்குனருமான ஆர்த்தி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் நடக்கும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

பி.எம்.ஏ. ஓய் திட்டம், மற்றும் பி.எம்.ஏ.ஓய்.ஜி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மொரசப்பல்லி ஊராட்சியில் 17 வீடுகள், டி.டி. மோட்டூர் ஊராட்சியில் 75 வீடுகள், சாத்கர் ஊராட்சியில் 6 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

சின்னதாமல் செருவு ஊராட்சியில் கழிவறைகள், 405 உறை கிணறுகள் இவை உள்பட ரூ 2 கோடியே 11 லட்சத்து 82 ஆயிரத்து 500 மதிப்பில் பணிகள் நடக்கின்றன. பாலூர் ஊராட்சியில் நூலகம் பழுது பார்க்கும் பணி நடக்கிறது.இவற்றை ஆய்வு செய்த திட்ட இயக்குனர் ஆர்த்தி பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, பாரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரசன்னா தேவி நீஸ், சங்கீத பிரியா, ராஜமாணிக்கம், அமீலா, ஓவர்சியர்கள் சலீம், உமாமகேஸ்வரி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.


Next Story