57 அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆண்டுகள் பணி முடித்த 57 அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆண்டுகள் பணி முடித்த 57 அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 25 சதவீதம் முதன்மை குழந்தைகள் மைய அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணிமுடித்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதிவாய்ந்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வயது மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் முதன்மை குழந்தைகள் மைய அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு வழங்க ஆணையிடப்பட்டு உள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பணியாற்றி வரும் தகுதியுடைய அங்கன்வாடி உதவியாளர்கள் 57 ேபருக்கு முதன்மை குழந்தைகள் மைய அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு ஊதிய விகிதம்
அதன்படி அனக்காவூர் வட்டாரத்தில் 5 பேர், ஆரணி வட்டாரத்தில் 3 பேர், சேத்துப்பட்டு வட்டாரத்தில் 7 பேர், செங்கம் வட்டாரத்தில் 7 பேர், கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் ஒருவர், போளூர் வட்டாரத்தில் 5 பேர், புதுப்பாளையம் வட்டாரத்தில் 7 பேர்,
தண்டராம்பட்டு வட்டாரத்தில் 8 பேர், தெள்ளார் வட்டாரத்தில் ஒருவர், திருவண்ணாமலை கிராமப்புற வட்டராத்தில் 4 பேர், வந்தவாசி வட்டாரத்தில் 2 பேர், வெம்பாக்கம் வட்டாரத்தில் 3 பேர், மேற்கு ஆரணி வட்டாரத்தில் 4 பேர் என 57 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
முதன்மை அங்கன்வாடி பணியாளராக பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் சிறப்பு ஊதிய விகிதத்தில் ஊதியம் மற்றும் பிற படிகள் பெற தகுதியுடையவராவர்.
பதவி உயர்வு ஆணை பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் அவரவருக்கு வழங்கப்பட்ட மையத்தில் பணியில் சேர்ந்த விவரத்தினை சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.