வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு


வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு
x

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் 81 வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் 3 பேருக்கு உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் சாந்தி, உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டு மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று மாவட்டத்தில் பணியாற்றும் ராஜ்மோகன், மதுரை கலெக்டரின் வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளராக நியமனம் பெற்றுள்ளார். மேலும் மாவட்டத்தில் பணியாற்றும் சிவகுமார் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று டி. கல்லுப்பட்டியில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையில் உதவி திட்ட இயக்குனராக பணியாற்றும் விசாலாட்சி, விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.


Next Story