தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் பிரசாரம்


தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் பிரசாரம்
x
தினத்தந்தி 30 July 2023 12:45 AM IST (Updated: 30 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை திரும்ப பெற வேண்டும். நிரந்தர வேலையில் பணிபுரியும் நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சமவேலைக்கு சமஊதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண் விளைப் பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும் என்பது உள்பட 15-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வருகிற 9-ந்தேதி சென்னையில் பெருந்திரள் அமர்வு போராட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு போராட்ட ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கி பேசினார். இதில் தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


1 More update

Next Story