மோட்டார் சைக்கிளை ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பரமத்திவேலூரில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாமக்கல்
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் கடந்த 2 நாட்களாக பரமத்திவேலூரில் உள்ள பஸ் நிலையம், கடைவீதி, பள்ளி சாலை, 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த 8 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பெற்றோர்கள் தங்களது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி அளித்தால் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story