7 பேர் மீது வழக்குப்பதிவு


7 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 May 2023 11:45 AM IST (Updated: 24 May 2023 11:45 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்து மோசடி செய்தது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யோகா பயிற்சி நிலையம்

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதியை சேர்ந்தவர் வனிதா (வயது 52). யோகா பயிற்சி நிலையம் நடத்தி வந்தார். இவரை கோத்தகிரியை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டனர். அப்போது ரூ.500 நோட்டுகளாக ரூ.75 ஆயிரம் கொடுத்தால் அதற்கு பதிலாக ரூ.1 லட்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதை நம்பி வனிதா பணத்தை எங்கே கொண்டு வர வேண்டும் என்று செல்போனில் பேசிய நபர்களிடம் கேட்டு உள்ளார். அப்போது தர்மபுரி உழவர் சந்தை எதிரே உள்ள அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு பணத்தை கொண்டு வருமாறு அந்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

7 பேர் மீது வழக்கு

6 நாட்களுக்கு முன் வனிதா ரூ.10 லட்சத்துடன் தர்மபுரிக்கு வந்துள்ளார். செல்போனில் பேசியவர்கள் கூறியபடி அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது 2 கார்களில் அங்கு வந்த 7 பேர் வனிதாவிடம் பேசி உள்ளனர். பின்னர் காரில் அழைத்துச் சென்றபோது பணப்பையை பறித்துக் கொண்டு காரில் இருந்து இறக்கி விட்டு சென்று விட்டனர்.

இதுதொடர்பாக வனிதா கொடுத்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து இந்த மோசடி சம்பவம் தொடர்பாக சுப்பிரமணி, ஆல்பின், குருமூர்த்தி, ஜெயராம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story