தேவூர் அருகே அதிர்ச்சி:சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய சிறுவன்


தேவூர் அருகே அதிர்ச்சி:சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய சிறுவன்
x

தேவூர் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சங்ககிரி

திருமணம்

சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் சிறுவன், சிறுமியை கண்டித்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறுவன், சிறுமி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் யாருக்கும் தெரியாமல் எடப்பாடி-ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்துள்ளனர்.

கர்ப்பம்

அதன்பிறகு அவர்கள் உறவினர்கள் சிலரது உதவியுடன் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமானாள். இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி மாவட்ட சமூக நலத்துறை குழந்தைகள் உதவி மையத்துக்கு இ-மெயிலில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெனிபர் சோனியா ராணி விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் சமூக நல அலுவலர் ஜெனிபர் சோனியா ராணி புகார் அளித்தார்.

வழக்கு

இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

17 வயது சிறுமியை திருமணம் செய்து, சிறுவன் கர்ப்பமாக்கிய சம்பவம் தேவூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story