மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால்


மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால்
x

மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் கலெக்டர் முன்னிலையில் பொருத்தப்பட்டது.

சேலம்

மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் கலெக்டர் முன்னிலையில் பொருத்தப்பட்டது.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வகையான மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர்கள் கொடுத்த மனுவில், கடந்த பல ஆண்டுகளாக மாதம் ரூ.4 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயிக்க வேண்டும். போதுமான பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

அதேபோன்று முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி உள்ளிட்ட 345 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் கார்மேகம், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர். மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்றார்.

செயற்கை கால்

தொடர்ந்து 2 மாற்றுத்திறனாளிகளுக்கு கறவை மாடு வாங்குவதற்கு ரூ.1 லட்சம் வங்கிக் கடன் உதவி, ஒரு மாற்றுத்திறனாளிக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.26 ஆயிரத்து 800 மதிப்பிலான செயற்கை கால் ஆகியவற்றை வழங்கினார்.

இதில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மயில், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story