செயற்கை கால் வழங்கும் முகாம்


செயற்கை கால் வழங்கும் முகாம்
x

அரக்கோணத்தில் செயற்கை கால் வழங்கும் முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அரக்கோணம் இந்திய கடற்படை நகர அரிமா சங்கம் மற்றும் பெங்களூரு அங்க காருண்யா அறக்கட்டளை இணைந்து இலவச செயற்கை கால் வழங்கும் முகாம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழு தலைவர் டாக்டர். டி.ஆர்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இந்திய கடற்படை நகர அரிமா சங்க தலைவர் ஆரிப் அகமது, செயலாளர் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக அரக்கோணம் நகராட்சி ஆணையாளர் லதா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கினார். முகாமில் சுமார் 100 பயனாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முடிவில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழு மேலாளர் குமார் நன்றி கூறினார்.


Next Story