மசாஜ் சென்டரில் விபசாரம்; வாலிபர் கைது


மசாஜ் சென்டரில் விபசாரம்; வாலிபர் கைது
x

மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்தியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

மசாஜ் சென்டரில் விபசாரம்

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்கண்ணன் (வயது 38). டிரைவரான இவர், திருச்சி தீரன் நகரில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது, ஒருவர் அவரிடம் வந்து தனது பெயர் ஸ்ரீதர் என்று அறிமுகம் செய்து கொண்டு பேச்சு கொடுத்துள்ளார்.

மேலும், எதிரே அன்பு பார்க் ஓட்டலின் 4-வது தளத்தில் உள்ள கிங்பிஷர் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் வைத்துள்ளதாகவும், அதில் 3 இளம் பெண்கள் இருப்பதாகவும், ரூ.3 ஆயிரம் கொடுத்தால் உங்களுக்கு பிடித்தவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், இரு மடங்கு பணம் கொடுத்தால், அவர்களை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச்செல்லலாம் என்றும் கூறியுள்ளார்.

வாலிபர் கைது

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விபசார தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நளினி தலைமையிலான போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு திருவெறும்பூரை சேர்ந்த விவேக் கிருஷ்ணன் (வயது 29) என்பவர் வெளிமாநில மற்றும் தமிழக பெண்களை வைத்து விபசாரம் செய்தது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், திருச்சியை சேர்ந்த 2 பெண்கள் ஆகியோரை மீட்ட போலீசார், விவேக்கை கைது செய்தனர். மேலும், அங்கிருந்து 3 செல்போன்கள், ஒரு மடிக்கணினி, பணம் செலுத்தும் எந்திரம், ரூ.5 ஆயிரம் மற்றும் 7 ஆணுறை பாக்கெட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், விவேக் கிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 11-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 3 பெண்களும் காஜாமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story