வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம்; 5 வாலிபர்கள் கைது
வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்யப்பட்டது தொடர்பாக 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி வயலூர் சாலை பகுதியில் குமரன்நகரில் உள்ள ஒரு வீட்டில் இளம் பெண்களை அடைத்து வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தீவிர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு, சென்னை, கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 4 இளம் பெண்களை அடைத்து வைத்து 5 வாலிபர்கள் விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த ராஜா என்ற கார்த்திக்ராஜா (வயது 29), திருச்சி புத்தூர் நடுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் (21), நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சையது முஸ்தபா (28) மற்றும் கரூர் வெங்கமேட்டை சேர்ந்த சந்திரசேகர் (25), கவுதம் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 4 இளம் பெண்களை மீட்டு, காஜாமலையில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.