வளையல் கடையில் விபசாரம்


வளையல் கடையில் விபசாரம்
x
தினத்தந்தி 10 Aug 2023 12:15 AM IST (Updated: 10 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் வளையல் கடையில் நடைபெற்ற விபசாரம் தொடர்பாக பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள வளையல் கடையில் பெண்ணை வைத்து விபசாரம் நடைபெறுவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று குறிப்பிட்ட வளையல் கடையை சோதனை செய்தபோது அங்குள்ள அறையில் பெண்ணை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story