விபசார பெண் புரோக்கர் கைது
விபசார பெண் புரோக்கர் கைது
கோத்தகிரி
கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வாலிபர் ஒருவர், கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் டீ குடிக்க சென்றார். அவரை, கேர்பெட்டா பெந்தட்டி பகுதியை சேர்ந்த சுசீலா(வயது 40) என்பவர் வழிமறித்து தன்னிடம் அழகான பெண்கள் உள்ளனர், அவர்களிடம் உல்லாசமாக இருக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரம் தந்தால் போதும் என்று கூறியதுடன், தன்னிடம் இருந்த செல்போனில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தையும் காண்பித்தார்.
உடனே சுதாரித்துக்கொண்ட அந்த வாலிபர், பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு அந்த பெண்ணிடம் இருந்து தப்பித்து, கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பப்பிலா ஜாஸ்மின் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபசார புரோக்கராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. ெதாடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.