மனைவியை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது


மனைவியை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது
x

தா.பழூர் அருகே மனைவியை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நாயகனை பிரியாள் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவரது மனைவி சத்யா (28). மணிகண்டன் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று சத்யா சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மணிகண்டன் ஓட்டல் வேலை முடிந்து இரவு 1 மணியளவில் வீட்டிற்கு வந்து மனைவி சத்யாவை பார்த்து எங்கே ஊர் சுற்றி விட்டு வருகிறாய் என்று கேட்டுள்ளார். மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்ததாக சத்யா கூறியும் அதனை ஏற்காத மணிகண்டன் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி தலையில் கட்டையால் அடித்து தாக்கியுள்ளார். சத்யா சத்தம் போட்டு கத்தியதில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சண்டையை தடுத்துள்ளனர். இதையடுத்து தலையில் ரத்த காயம் ஏற்பட்ட சத்யா தனது மாமியார் உதவியுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். கணவர் தாக்கியதில் சத்யா தலையில் 20 தையல் போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து சத்யா அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story