விலைவாசி உயர்வை கண்டித்துதர்மபுரியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடந்தது


விலைவாசி உயர்வை கண்டித்துதர்மபுரியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 20 July 2023 7:00 PM GMT (Updated: 20 July 2023 7:01 PM GMT)
தர்மபுரி

விலைவாசி உயர்வை கண்டித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டஅ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் நடைபெற்று வரும் ஊழல் முறைகளை கண்டித்தும் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கட்சியின் அமைப்பு செயலாளர் சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், எம்.எல்.ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்றார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தின் போது காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், மோகன், சங்கர், கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், பழனி, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, தங்கராஜ், கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, நகர நிர்வாகிகள் அம்மா வடிவேல், அறிவாளி, சுரேஷ், பார்த்திபன், வேல்முருகன், பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பென்னாகரம் நகர செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story