குமாரபாளையத்தில்இடதுசாரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


குமாரபாளையத்தில்இடதுசாரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2023 12:30 AM IST (Updated: 23 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

குமாரபாளையம்:

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க கோரியும் குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இடதுசாரி தொழிற்சங்க அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார். பொதுநல அமைப்பு செயலாளர் பரமன் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தியும், மணிப்பூர் விவகாரத்ைத கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மோகன், பகலவன், புவனேஷ், விஸ்வநாதன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பஞ்சாலை சண்முகம் நன்றி கூறினார்.


Next Story