தர்மபுரியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஜீவா, நிர்வாகிகள் வெண்ணிலா, ஆறுமுகம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும். துறையில் உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். பகுதி நேர ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மின்வாரிய ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மின்வாரிய ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story