ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்நெற்றியில் நாமம் அணிந்து கன்னட அமைப்பினர் காலிக்குடங்களுடன் போராட்டம்பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது


ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்நெற்றியில் நாமம் அணிந்து கன்னட அமைப்பினர் காலிக்குடங்களுடன் போராட்டம்பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது
x
தினத்தந்தி 28 Sep 2023 7:00 PM GMT (Updated: 28 Sep 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் நெற்றியில் நாமம் அணிந்த கன்னட அமைப்பினர் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டம்

கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தமிழக- கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ரக்ஷன வேதிகே (சிவராம் கவுடா அணி) அமைப்பின் மாநில தலைவர் சிவராம் கவுடா, மஞ்சுநாத் கவுடா ஆகியோரது தலைமையில் போராட்டம் நடந்தது.

முன்னதாக அத்திப்பள்ளியில் இருந்து ஊர்வலமாக கர்நாடக மாநில எல்லை பகுதிக்கு வந்த கன்னட அமைப்பினர் தமிழகத்திற்கு எதிராகவும், தண்ணீர் திறக்க உத்தரவிட்ட காவிரி மேலாண்மை குழு மற்றும் மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

கைது

மேலும் கழுத்தில் காலிக்குடங்களை மாட்டி கொண்டும், நெற்றி மற்றும் உடலில் நாமம் போட்டு கொண்டும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு சிலர் எல்லையில் உள்ள வரவேற்பு வளைவின் சுவர், பஸ்கள் மீது ஏறி நின்றும், நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்கள் நடுவே படுத்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இருமாநில எல்லையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story