தர்மபுரியில்தொழிலாளர்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அர்ஜூணன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் மணி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவா, தொ.மு.ச. மாவட்ட தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் சண்முகராஜா, ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் சிவலிங்கம், சண்முகம், கூட்டமைப்பு நிர்வாகிகள் முருகானந்தம், கோவிந்தராஜ், முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்கவேண்டும்.தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை நீக்கவேண்டும்.பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்யவேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி ரேஷன் முறையை பலப்படுத்த வேண்டும்.முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கருப்பு கொடிகளை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.