இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் மீது தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்து சிவகங்கை மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயற்குழு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உறுப்பினர் ராஜா முஹம்மது தலைமை தாங்கினார்.

சிவகங்கை ஹவ்வா பள்ளிவாசல் இமாம் மன்சூர் ஹூசைன் காஷிபி கண்டன உரையாற்றினார். இதில் சிவகங்கையில் உள்ள ஐந்து பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாவட்ட செயலாளர் இம்தியாஸ் நன்றி கூறினார்.


Next Story