மனித சங்கிலி போராட்டம்
மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
காரைக்குடி,
காரைக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர்கழகம், நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மக்கள்மன்றம், தமிழ் புலிகள், மே 17 இயக்கம் ஆகியவற்றின் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாங்குடி எம்.எல்.ஏ., நகர் தலைவர் பாண்டிமெய்யப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார், மாநில துணைச் செயலாளர்கள் இளைய கவுதமன், பெரியசாமி, திராவிடர் கழகத்தின் சார்பில் தென்மண்டல செயலாளர் சாமி திராவிட மணி, மாவட்ட செயலாளர் வைகறை, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் சிம்சன், தாலுகா செயலாளர் ஸ்டீபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏ.ஐ.டி.யு. சி மாநில துணைச் செயலாளர் ராமசந்திரன், மாவட்ட செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா செயலாளர் அழகர்சாமி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நகர் செயலாளர் சேது தியாக ராஜன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பசும் பொன் மனோகரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மண்டல செயலாளர் மாறன், தளக்காவூர் மதி, முத்து ராமலிங்கம் மக்கள் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.