அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்-பா.ஜனதாவினர் எதிர்ப்பு கோஷத்தால் பரபரப்பு
சேலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பா.ஜனதாவினர் எதிர்ப்பு கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய கல்வி நிலையங்களில் இந்தி மொழியை மத்திய அரசு திணிப்பதாக கூறி அதை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பரெுமன்றம் சார்பில் சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய கல்வி நிலையங்களில் இந்தி மொழி திணிப்பதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அதேேநரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே, தமிழக அரசை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் சிலர், மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்திந்திய இளைஞர் பரெுமன்றத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் பரபரப்பான சூழ்நிலை உருவானது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இருதரப்பினரிடமும் ஆர்ப்பாட்டங்களை முடித்துவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.