ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்: வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்


ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்: வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:15:20+05:30)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

வேப்பிலைஅள்ளி ஊராட்சியில் காட்டு யானைகள் விரட்டும் பணியின் போது விவசாயிகளுக்கும், வனத்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வனத்துறையினர் தாக்கியதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விவசாயிகள் காயம் அடைந்தனர். இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பாப்பாரப்பட்டி பழைய பஸ் நிலையம் அருகே போராட்டம் நடந்தது.

வட்டார தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராதிகா, ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அர்ஜூனன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். மாவட்ட தலைவர் குமார், மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏ.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார துணை செயலாளர் காமராஜ் நன்றி கூறினார்.


Next Story