தர்மபுரியில்திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டில் தகுதி உள்ள சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தர்மபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவாஜி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர்கள் கதிர், புலவர் வேட்ராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ்திலீபன், மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, கர்நாடக மாணவர் கழக தலைவர் முனியப்பன், நகர தலைவர் கருபாலன், மாவட்ட துணை செயலாளர் சரவணன், மாவட்ட தொழிலாளரணி துணைத்தலைவர் சிசுபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி தலைவர் பூபதிராஜா நன்றி கூறினார்.