தர்மபுரியில்விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 April 2023 12:30 AM IST (Updated: 10 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக கவர்னரை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி தலைவரும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான பொன்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்கள் ஜெகதீசன், ஜெகமுகன், மாநில இணை செயலாளர் பானுகோபால், மாநில இணை பொதுச்செயலாளர் மனோகரன், மாநில அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் முருகன், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் பழனி, திருமலைவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story