கண்டன ஆர்ப்பாட்டம்


கண்டன ஆர்ப்பாட்டம்
x

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராஜசேகர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். முன்னதாக மாவட்ட செயலாளர் கணபதி வரவேற்று பேசினார். புது சுகாதாரத்துறை மாநில செயலாளர் ராஜா, கிராம உதவியாளர் சங்க மாநில மகளிர் அணி செயலாளர் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஆண்டிமடம் வட்டத் தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.


Next Story