தர்மபுரியில்ஆணவ படுகொலைகளை தடுக்ககோரி ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்ஆணவ படுகொலைகளை தடுக்ககோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 April 2023 12:30 AM IST (Updated: 21 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

ஆணவ படுகொலைகளை தடுக்க தனிசட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் மாதையன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஆனந்தன், மாவட்ட தலைவர் ஜெயராமன், நிர்வாகிகள் கோவிந்தசாமி, ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்து, சிறுபான்மை நலக்குழு மாவட்ட பொறுப்பாளர் கிரைஸாமேரி,சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருள்குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தமிழ்நாட்டில் இனிமேல் ஆணவ படுகொலைகள் நடக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்றவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

1 More update

Next Story