தர்மபுரியில்ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைத்தலைவர் சுதர்சனன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் மணி, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் குழந்தைவேலு, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன், போக்குவரத்து தொழிலாளர் சங்க மண்டல தலைவர் ரவி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தொழிற்சாலைகளில் 8 மணி வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். தொழிலாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.