தர்மபுரியில்பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 April 2023 12:30 AM IST (Updated: 28 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி ஞானசேகரன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். தொழிலாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த புதிய தேசிய தொழிலாளர் கொள்கையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story