தர்மபுரியில்ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 May 2023 12:30 AM IST (Updated: 5 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் பொது வினியோக திட்டத்திற்கு என தனித்துறை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் குமார், பொருளாளர் ஜான் ஜோசப், மாவட்ட நிர்வாகிகள் முருகன், சுகதேவ், குமார், பாலகிருஷ்ணன், சண்முகம், பழனிசாமி, சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும். விற்பனை மையத்தில் 2 முறை பில் பதிவு செய்வதை ரத்து செய்ய வேண்டும். மாதந்தோறும் ஊதியத்திற்கு என நிதி ஒதுக்க வேண்டும். பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story