தேனியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி
காங்கிரஸ் கட்சியின் பட்டியல் பிரிவு சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காத பா.ஜ.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பட்டியல் பிரிவு மாவட்ட தலைவர் இனியவன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் முத்துராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சின்னபாண்டி, நகர தலைவர் கோபிநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story