குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து
x

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2019-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. நிலுவையில் இருக்கக்கூடிய இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் சுமார் 5,500 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான இந்த வழக்கை விசாரிப்பதில் எந்த பலனும் இல்லை என கூறி, வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story