தடையை மீறி கள் இறக்கும் போராட்டம்


தடையை மீறி கள் இறக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2023 1:45 AM IST (Updated: 27 Aug 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தடையைமீறி கள் இறக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

திண்டுக்கல்

தமிழ்நாடு கள் இறக்குவோர் கூட்டமைப்பின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கொடைக்கானலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உணவு பட்டியலில் கள் உள்ளது. புதுச்சேரி, கேரளா, ஆந்திர மாநிலங்களில் கள் இறக்க தடை கிடையாது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கள்ளை பாட்டில், டப்பா, டின்கள், சிறிய கவர்களில் அடைத்து வைத்து மதுக்கடைகளில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 8 கோடி பனை மரங்களில், 5 கோடி பனை மரங்கள் தமிழ் நாட்டில் தான் உள்ளன. ஆனால் தமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21-ந்தேதி தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இதற்கு சில அரசியல் கட்சியினர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கள்ளுக்கு விதித்த தடையை அரசு நீக்க வேண்டும். கள் விற்பனைக்கு அனுமதி அளிப்பதன் மூலம் தமிழகம் பொருளாதார வளச்சி பெற்று முதன்மை மாநிலமாக மாறும்.

கொடைக்கானலில் திரைப்பட நடிகர்கள் நிலத்தை வாங்கி, அதில் விவசாயம் செய்வதில்லை. அவர்கள் நிலத்தில் தங்களது பணத்தை முதலீடு செய்கின்றனர். விைளநிலம் விற்பனையாவதால் உற்பத்தி குறைந்து, நாட்டில் பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகும்.

இவ்வாறு நல்லசாமி கூறினார்.


Related Tags :
Next Story