குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து போராட்டம்


குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து போராட்டம்
x

திருவூர் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த திருவூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராம் நகர் மற்றும் ராஜபுரம் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செல்போன் டவர் அமைக்கும் இடமானது குடியிருப்புக்கு மத்தியிலும், கோவில் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு மத்தியில் அமைய உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகர் வாழ் மக்களின் சட்ட ஆலோசகர் வக்கீல் பாலசுப்பிரமணியன் தலைமையில், குடியிருப்பு பகுதியில் தலைவர் ராஜன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் கந்தசாமி, ஆலோசகர் சக்திவேல், துணை செயலாளர் ஸ்ரீ ஹரி என 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் மாற்று இடத்தில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story