பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாரியப்பிள்ளை, மாநில பட்டியல் அணி செயலாளர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெயதுரை, தியாகராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் துரை நாடார், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் வில்சன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன், கலை மற்றும் கலாசார பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டு சென்னையில் பா.ஜ.க. பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் ஒன்றிய மகளிரணி தலைவி சிவசங்கரி நன்றி கூறினார்.


Next Story