பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் அண்ணா சிலை அருகே பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த கட்சியின் பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பட்டியல் அணி மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன் முன்னிலை வகித்தார். பா.ஜ.க.வினர் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் தொடர் தாக்குதலை வேடிக்கை பார்ப்பதாக கூறி, தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி மாவட்ட தலைவர் அனிதா, நகர தலைவர் மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story