ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Nov 2022 1:00 AM IST (Updated: 30 Nov 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஜூலை மாதம் 1-ந் தேதியில் இருந்து முடக்கி வைக்கப்பட்டு உள்ள அகவிலைப்படி உயர்வை உடனடியாக நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சஙகங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் செந்தில்செல்வன் வரவேற்று பேசினார். ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் வாசுகி, நல்லகுமார், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராமு, பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் மலர்க்கண்ணன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொருளாளர் முருக. செல்வராசன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணை செயலாளர் சரவணன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அருள்செல்வன் நன்றி கூறினார்.

1 More update

Next Story