ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட துணை தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், கிராமப்புற நூலகர் உள்ளிட்ட பணிகளில் தொகுப்பூதிய, மதிப்பூதிய, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றியவர்களுக்கு மிகக்குறைந்த அளவே ஒய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேேபால் ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் ஆலங்குடி வட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் வட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.
பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் ராமன் தலைமை தாங்கினார். இதில் ஓய்வூதியர் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.