மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் கலவரத்தை தடுத்து நிறுத்த கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
கோத்தகிரி
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தை தடுத்து நிறுத்த கோரியும், மத்திய அரசை கண்டித்தும் மக்கள் அதிகாரம் மற்றும் முற்போக்கு மக்கள் மேடை சார்பில் கோத்தகிரி மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி ரவி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி சோழா மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மண்ணரசன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாநில பொதுச்செயலாளர் லோகநாதன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. முடிவில் மக்கள் அதிகாரம் மாவட்ட இணை செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story